வன்னி எலி எண்மின் காணொளி வட்டு வெளியீடு!

ஈழத்தமிழ் திரைப்படத் துறையில் முதல் சர்வதேச விருது பெற்ற "வன்னி எலி"
குறும்படம் எதிர்வரும் 27.11.2010 முதல் உலகெங்கும் எண்மின் காணொளி
வட்டில் வெளிவர உள்ளது.

தமிழியம் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழியம் சுபாஸ் இயக்கிய இக்
குறும்படம், சுதந்திரமாக வாழ்ந்த ஈழத்தமிழர்கள் சிங்கள அரச தடுப்பு
முகாம்களில் அனுபவித்த, அனுபவித்து வரும் பயங்கரங்களை திரைமொழியாக்கி,
காட்சி ஊடகம் ஊடாக உலகிற்கு வெளிப்படுத்திய ஒரே ஒரு ஈழத்தமிழர்
கலைப்படைப் பாகும்.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன், இயக்குநர் பாலு மகேந்திரா உட்பட பல பிரபல
தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் சர்வதேச திரைப்பட
விமர்சகர்களால் இக் குறும்படத்தில் பாவிக்கப்பட்ட யுக்தி மற்றும்
தொழில்நுட்பம் போன்றவை மிகவும் பாராட்டுப்பெற்றன.



சர்வதேச தரத்தில் எடுக்கப்பட்ட வன்னி எலி குறும்படம், சர்வதேச விருது
உட்பட பல விருதுகளைப் பெற்றது மட்டுமன்றி பல சர்வதேச திரைப்படப்
போட்டிகளில் தேர்வாகியும் உள்ளது.

வன்னி எலி குறும்படம் இதுவரை பெற்ற விருதுகள்:
• சிறப்பு விருது, பெரியார்திரை குறும்பட விழா (இந்தியா 2009)
• சிறப்பு விருது, தமிழ் திரைப்பட விழா (நோர்வே 2010)
• சிறந்த கதைக்கான சர்வதேச விருது (வங்காளதேசம் 2010)
• சிறந்த விமர்சனப்படம், 8வது சர்வதேச தமிழ் திரைப்பட விழா (கனடா 2010)
• இரண்டாம் பரிசு, மக்கள் தொலைக்காட்சி பத்து நிமிடக்கதைகள் (இந்தியா 2010)

சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகியவை:
• விப்ஜோர் சர்வதேச திரைப்பட விழா (இந்தியா 2010)
• ஐரோப்பிய சுதந்திர திரைப்பட விழா (பிரான்ஸ் 2010)
• சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா (கொசோவோ 2010)
• 14வது சர்வதேச ஆவணப்பட விழா (செக் குடியரசு 2010)

இவ் எண்மின் காணொளி வட்டில் தமிழியம் சுபாஸ் இயக்கி பல விருதுகளைப்பெற்ற
மற்றுமொரு குறும்படமாகிய ”எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?” குறும்படமும்
இலவச இணைப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



இத்திரைப்படத்தின் எண்மின் காணொளி வட்டு உரிமையை, தாயகத்தில் போரினால்
வலுவிழந்தோருக்கு உதவும் அரசுசார்பற்ற ஈழத்தமிழர் உதவி நிறுவனமாகிய
பச்வோக் (Patchwork) இற்கு தமிழியம் நன் கொடையாக வழங்கி உள்ளது.

இக் குறும்பட எண்மின் காணொளி வட்டை தமிழ் மக்கள் வசிக்கும் அனைத்து
நாடுகளிலும் உள்ள பெரும்பாலான தமிழ் வர்த்தக நிலையங்களில்
பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.patchwork.org.au எனும் இணையத்தளத்திலும்
பெற்றுக்கொள்ளலாம்.

இக்குறும்படம் பற்றிய மேலதிக தகவல்களை தமிழியம் இணையத்தில் பார்வையிடலாம்
www.tamiliam.com



வன்னி எலி கதைச்சுருக்கம்:
வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை
இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள
வதை முகாமுக்குள் எதேட்சையாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால்
வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத
அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு
இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா
இல்லையா என்பதே முடிவு.

எனக்கு ஒரு கனவு இருக்கலாமா? கதைச்சுருக்கம்:
"எனக்கு ஒரு கனவு இருக்கு" என்றார் சில சகாப்தங்களிற்கு முன் மார்ட்டின்
லூதர் கிங். "எனக்கு ஒரு கனவு இருக்கலாமா?" என போரினால் பாதிக்கப்பட்ட
ஒரு சிறுமி கேட்கிறாள் நாகரீக உலகிடம். ஒரு சிறுமியின் கேள்வி
மட்டுமல்லாமல் 60 லட்சம் சிறுவர்களின் கேள்வியே எனக்கு ஒரு கனவு
இருக்கலாமா?.

எண்மின் காணொளி வட்டு வெளியீடு விளம்பரம்:
http://www.youtube.com/watch?v=0CoqF4tfW7M

வன்னி எலி பற்றி இயக்குநர் பாலு மகேந்திரா
http://www.youtube.com/watch?v=-JS_gTrro60

வன்னி எலி பற்றி உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன்
http://www.youtube.com/watch?v=JlLSzir2rkA

தமிழியம் தயாரிப்பில் உருவான “வன்னிஎலி” குறும்படம் பங்களாதேஸ் தலைநகர் டாகாவில் நடைபெற்ற 11 வது சர்வதேச குறும்பட மற்றும் சுதந்திரஊடகத்திற்கான திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.


ஈழத்தமிழர்களின் திரைப்படம் ஒன்று சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு பெறுவது இதுவே முதற் தடவை என ஈழவர் திரைக்கலை மன்ற தலைவர் திரு யோசெப் செல்லப்பா அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்குறும்படமானது கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெரியார் குறும்படவிழாவில் சிறப்புப்பரிசையும், இவ்வருடம் நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்படவிழாவில் சிறப்புப்பரிசையும் பெற்றது மட்டுமல்லாமல் Vibgyorfilm festival 2010 ல் “இவ்வருடப்பார்வை தெற்காசியா” எனும் பிரிவிலும், The European Independent Film Festival 2010 ல் ஐரோப்பிய குறும்படப்பிரிவிலும் தெரிவாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தவிர தற்பொழுது மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் “10 நிமிடக்கதைகள்” எனும் குறும்படபோட்டி நிகழ்விலும் கலந்துகொண்டு மக்களினதும் , இயக்குனர்களினதும் பாராட்டை பெற்றுள்ளது.

கதைச்சுருக்கம்:

வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், மூன்று லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியா வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத, யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.

______________________

“வன்னி எலி” குறும்படம்பற்றிய மேலதிக தகவல்கள்

இக்குறும்பட விழா பற்றி பங்களாதேஸ் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள். Press release about 11th international short & ind. film festival Links: 
http://www.newagebd.com/2010/mar/14/time.html
http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=130088


ஏனைய விருதுகள் Awards: 
Won special prize at Periyar short film festival 2009 
http://www.modernrationalist.com/2010/january/page12.html 


Won special prize at Tamil film festival 2010 
http://tamilnet.com/art.html?catid=13&artid=31181


சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வுக்கு உள்ளாகியவை Official selection:

Vibgyor International Film Festival 2010 under theme “Focus of the Year: `South Asia’”

http://www.vibgyorfilm.org/2010/announcement

http://spreadsheets.google.com/pub?key=tf8B7zIXo49PN-LeQpUmNEg&single=true&gid=0&output=html



The European Independent Film Festival 2010 under category European Dramatic Short

http://www.ecufilmfestival.com/en/2010/03/vanni-mouse/


மக்கள் தொலைக்காட்சியில் Makkal TV "10 Nimida Kathaikal" shortfilm competition

http://www.youtube.com/watch?v=nAaNsp_sFj8


தமிழியம் /வன்னிஎலி/ இணையம் Vanni Mouse Official website:

http://www.tamiliam.com/?p=115


வன்னிஎலி குறும்பட முன்னோட்டம் Vanni Mouse official Trailer:

http://www.youtube.com/watch?v=AzsnFpq7xvM


அனைத்துலக திரைப்பட தகவல் திரட்டியில் External Links:

http://www.imdb.com/title/tt1587374/

வன்னிஎலி குறும்படம் Vibgyor International Film Festival 2010 ல் "இவ்வருடப்பார்வை: தெற்கு ஆசியா" எனும் பிரிவுப்படங்களுக்குள் தெரிவாகிஉள்ளது.
வன்னிஎலி குறும்படம் Vibgyor International Film Festival 2010 ல் "இவ்வருடப்பார்வை: தெற்கு ஆசியா" எனும் பிரிவுப்படங்களுக்குள் தெரிவாகிஉள்ளது. இக் குறும்படம் சென்னையில் 25.12.2009 அன்று பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டியில் சிறப்புப்படத்திற்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தெரிவான 10 படங்களுள் நோர்வேயிய இயக்குனர் பெயாரே ஆனஸ்ரா (BEATE ARNESTAD) இயக்கி பல சர்வதேச விருதுகளைப்பெற்ற "என் மகள் பயங்கரவாதி" (My Daughter The Terrorist) எனும் ஆவணப்படமும் தெரிவாகிஉள்ளது. இவ் இரு படங்களும் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனையை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


இச்சர்வதேச திரைப்பட விழாவில் 10 பிரிவுகளாக 80ற்கு மேற்பட்ட படங்கள் போட்டியிடுகின்றன, போட்டிக்கு தெரிவாகிய அனைத்து படங்களும் 17– 21 February, 2010 காலப்பகுதியில் Kerala Sangeeta Nataka Academy premises, Thrissur, Kerala. வில் திரையிடப்பட உள்ளன.


மேலதிக தகவல்களுக்கு:
http://spreadsheets....d=0&output=html
http://www.vibgyorfilm.org
வன்னிஎலி - குறும்படம்
கதைச்சுருக்கம்:
வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.

கதை
தயாரிப்பு
நெறியாள்கை

தமிழியம் சுபாஸ்

www.tamiliam.com

http://www.imdb.com/title/tt1587374/


Tamiliam - தமிழியம்