தமிழியம் தயாரிப்பில் உருவான “வன்னிஎலி” குறும்படம் பங்களாதேஸ் தலைநகர் டாகாவில் நடைபெற்ற 11 வது சர்வதேச குறும்பட மற்றும் சுதந்திரஊடகத்திற்கான திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.
ஈழத்தமிழர்களின் திரைப்படம் ஒன்று சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு பெறுவது இதுவே முதற் தடவை என ஈழவர் திரைக்கலை மன்ற தலைவர் திரு யோசெப் செல்லப்பா அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
இக்குறும்படமானது கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெரியார் குறும்படவிழாவில் சிறப்புப்பரிசையும், இவ்வருடம் நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்படவிழாவில் சிறப்புப்பரிசையும் பெற்றது மட்டுமல்லாமல் Vibgyorfilm festival 2010 ல் “இவ்வருடப்பார்வை தெற்காசியா” எனும் பிரிவிலும், The European Independent Film Festival 2010 ல் ஐரோப்பிய குறும்படப்பிரிவிலும் தெரிவாகியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இது தவிர தற்பொழுது மக்கள் தொலைக்காட்சியில் இடம்பெற்றுவரும் “10 நிமிடக்கதைகள்” எனும் குறும்படபோட்டி நிகழ்விலும் கலந்துகொண்டு மக்களினதும் , இயக்குனர்களினதும் பாராட்டை பெற்றுள்ளது.
கதைச்சுருக்கம்:
வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், மூன்று லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியா வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத, யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு.
______________________
“வன்னி எலி” குறும்படம்பற்றிய மேலதிக தகவல்கள்
இக்குறும்பட விழா பற்றி பங்களாதேஸ் ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகள். Press release about 11th international short & ind. film festival Links:
http://www.newagebd.com/2010/mar/14/time.html
http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=130088
ஏனைய விருதுகள் Awards:
Won special prize at Periyar short film festival 2009
http://www.modernrationalist.com/2010/january/page12.html
Won special prize at Tamil film festival 2010
http://tamilnet.com/art.html?catid=13&artid=31181
சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வுக்கு உள்ளாகியவை Official selection:
Vibgyor International Film Festival 2010 under theme “Focus of the Year: `South Asia’”
http://www.vibgyorfilm.org/2010/announcement
http://spreadsheets.google.com/pub?key=tf8B7zIXo49PN-LeQpUmNEg&single=true&gid=0&output=html
The European Independent Film Festival 2010 under category European Dramatic Short
http://www.ecufilmfestival.com/en/2010/03/vanni-mouse/
மக்கள் தொலைக்காட்சியில் Makkal TV "10 Nimida Kathaikal" shortfilm competition
http://www.youtube.com/watch?v=nAaNsp_sFj8
தமிழியம் /வன்னிஎலி/ இணையம் Vanni Mouse Official website:
http://www.tamiliam.com/?p=115
வன்னிஎலி குறும்பட முன்னோட்டம் Vanni Mouse official Trailer:
http://www.youtube.com/watch?v=AzsnFpq7xvM
அனைத்துலக திரைப்பட தகவல் திரட்டியில் External Links:
http://www.imdb.com/title/tt1587374/
Legg inn en kommentar