வன்னிஎலி குறும்படம் Vibgyor International Film Festival 2010 ல் "இவ்வருடப்பார்வை: தெற்கு ஆசியா" எனும் பிரிவுப்படங்களுக்குள் தெரிவாகிஉள்ளது.
வன்னிஎலி குறும்படம் Vibgyor International Film Festival 2010 ல் "இவ்வருடப்பார்வை: தெற்கு ஆசியா" எனும் பிரிவுப்படங்களுக்குள் தெரிவாகிஉள்ளது. இக் குறும்படம் சென்னையில் 25.12.2009 அன்று பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை மற்றும் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்திய முதலாம் ஆண்டு பெரியார் திரை குறும்படப் போட்டியில் சிறப்புப்படத்திற்கான விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.  

தெரிவான 10 படங்களுள் நோர்வேயிய இயக்குனர் பெயாரே ஆனஸ்ரா (BEATE ARNESTAD) இயக்கி பல சர்வதேச விருதுகளைப்பெற்ற "என் மகள் பயங்கரவாதி" (My Daughter The Terrorist) எனும் ஆவணப்படமும் தெரிவாகிஉள்ளது. இவ் இரு படங்களும் ஈழத்தமிழரின் இனப்பிரச்சனையை மையமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.


இச்சர்வதேச திரைப்பட விழாவில் 10 பிரிவுகளாக 80ற்கு மேற்பட்ட படங்கள் போட்டியிடுகின்றன, போட்டிக்கு தெரிவாகிய அனைத்து படங்களும் 17– 21 February, 2010 காலப்பகுதியில் Kerala Sangeeta Nataka Academy premises, Thrissur, Kerala. வில் திரையிடப்பட உள்ளன.


மேலதிக தகவல்களுக்கு:
http://spreadsheets....d=0&output=html
http://www.vibgyorfilm.org
0 Responses